ABHMS

Hindu Mahasabha


 

  கேள்வியும் பதிலும்....
இந்து மகா சபா தலைவர் த.பா கடந்து வந்த பாதை....

இந்துக்களால் வெற்றி பெற முடியுமா..

என்ற பல கேள்விகளுடன் இது அனைவரும் இதை படியுங்கள்....

த.பால சுப்ரமணியன் M.A கடந்த 40 ஆண்டு கால சமுதாயப் பணிகளை நினைவிற்கொள்ளும்போது கடந்த 35 ஆண்டுகாலமாக ஹிந்து சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேகமும் விவேகமும் இணைந்த ஒரு ஹிந்து இளம் தலைவர் அகில பாரத இந்து மகா சபா வின் மாநிலத் தலைவர் திரு.த.பாலசுப்பிரமணியன் அவர்களுடன் நேர்காணல் கண்டது ஒரு பொருத்தம் தானே. ஆணித்தனமான வாதங்கள், அடுக்கடுக்கான நிகழ்வுகள், ஒழிவு மறைவற்ற கருத்துகள் இவைகள் தான் இந்நேர்காணலில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம். இதோ! நீங்களும் வாருங்கள். நாம் இணைந்து இளந்தலைவரின் கருத்துகளை சுவைப்போம்! நீங்கள் எத்தனை வருடமாக ஹிந்து சமுதாயப்பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள்? எனது 13ஆம் வயதிலிருந்து R.S.S. . ஸ்வயம் சேவகனாக சேர்ந்து பயிற்சி பெற்றேன். கடந்த 35 ஆண்டுகளாக ஹிந்து சமுதாய மறுமலர்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

ஹிந்து சமுதாயப் பணியில் நீங்கள் எப்படி இணைந்தீர்கள் ?
நான் ஏழாம் வகுப்பு அரசு பள்ளியில் படிக்கும்போது பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் தலைமை ஆசிரியர் அனுமதியின் பெயரில் பைபிள் விநியோகிக்கப்பட்டது. மறுநாள் அந்த பகுதி இந்துக்கள் பள்ளியின் முன்பு பைபிளை கிழித்துப் போட்டு, தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டனர். பள்ளி மாணவர்களை திரட்டி இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வெளிநடப்பு செய்தேன். அவர்களிடம் மாணவர்கள் சார்பில் புகார் எழுதி கொடுத்து பைபிள் விநியோகிக்க காரணமான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு காரணமானேன். இதன் மூலம் சுற்றி உள்ள இந்து கிராமங்களில் உணர்வுள்ள இந்துக்கள் பார்வை என் பக்கம் விழுந்தது. அதன் பின் பாலர்ஷாகா (R.S.S. .ன் சிறுவர் பங்குபெறும் கிளை) முக்கிய சிக் ஷக் (பயிற்சியாளர்) ஆனேன். தினமும் ஷாகா செல்வது அதன்மூலம் ஹிந்து என்பதே தேசீயம் என்ற உணர்வு ஏற்பட்டது. இவ்வாறு ஹிந்து சமுதாயப் பணியில் அடிஎடுத்து வைத்தேன்.

ஹிந்து சமுதாயப் பணியில் இவ்வளவு வேகமாக நீங்கள் ஈடுபட காரணம் என்ன?
ஹிந்து சமுதாயப் பணியில் ஈடுபட எனக்கு ஒரு சம்பவம் உத்வேகத்தைக் கொடுத்தது. அந்த சம்பவம்தான் என்னை உலுக்கியது, உருவாக்கியது எல்லாம். இந்துக்கள் தோல்வி பெற்ற நிகழ்வு அது. கதையல்ல. கற்பனையல்ல உண்மை சம்பவம். ரத்த நாளங்களை சூடேற்றி இன்றும் என்னை தொய்வில்லாமல் பணியை செய்திட ஊக்கம் கொடுத்து வரும் நிகழ்வு. 1982-ல் மண்டை காட்டில் நடந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சிதான் அது. மண்டைக்காடு பகவதியம்மன் ஆலய விழாவிற்கு இருமுடி ஏந்தி வந்த கேரளத்து பெண்களை முழு நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய கிறித்தவ மீனவர்களை காவல் துறை சுட்டது. சிலர் மாண்டு போனார்கள். விளைவு குமரி, நெல்லை மாவட்ட கடலோர இந்து கிராமங்கள் தாக்கப்பட்டன. வியாபாரத் தலங்கள் சூறையாடப்பட்டன. கிறித்தவ மீனவர்களால் இந்துக்கள் கடல் மீன்களுக்கு இரையாக்கப்பட்டனர்.
நானும் கடலோர இந்து கிராமத்தைச் சேர்ந்தவன். நான் வாழும் ஈத்தாமொழியில் கிறித்தவ மீனவர்களுக்கும் இந்துக்களுக்கும் கலவரம். நான்கு இந்துக்களை கடலில் கட்டி தாழ்த்தினர். கிறித்தவ மீனவர்களுக்கும் கடலோர இந்துக்களுக்குமிடையே பிரச்சனை. முஸ்லீம் வாலிபன் ஒருவன் திரு. இராமகிருஷ்ணன் நாடார் என்ற முதியவரை இரும்பு கொக்கியால் வயிற்றை கிழித்து கொன்றதை கண்ணால் பார்த்தவன் நான். பிரச்சனை கிறித்தவர்க்கும் இந்துவுக்கும். ஆனால் இங்கே இந்துவை கொன்றவன் இஸ்லாமியன். ஏன், எதற்காக. இன்னும் விடை தொரியவில்லை. மிகப்பொரிய இந்துக்களின் கூட்டம் கிறித்தவ மீனவ கிராமத்தை தாக்க புறப்பட்டது. என் வாழ்நாளில் அத்தகைய உணர்வோடு கூடிய கூட்டத்தை இன்றுவரை நான் பார்த்ததில்லை. அந்த கூட்டத்தில்ள் ஏதோ ஒரு மூலையில் நானும் நின்றுகொண்டிருந்தேன். நான் நினைத்தேன். இந்த கூட்டம் ஆயுதம் எடுக்க தேவையில்லை, இந்துக்கள் நேராக சென்றாலே இவர்களில் 25-ல் ஒருபங்கு இருக்கும் கிறித்தவ மீனவர்கள் ஓடிவிடுவார்கள் என்று நினைத்தேன். முடிவு வேறாக இருந்தது. தலைவன் இல்லாத கூட்டமாக, தான்தோன்றி தனமாக சென்றதன் விளைவு மிகப்பெரும் தோல்வி, திரும்பி ஓடினார்கள். இந்துக்களில் சில சுயநல கும்பல்கள் இந்துக்கள் தோப்புகளிலேயே திருட ஆரம்பித்தது. தோல்வி...தோல்வியோ.... தோல்வி.... இது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒருமணி நேரம் அவகாசம் கொடுத்திருந்தபோதும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத சமுதாயமாக நமது சமுதாயம் இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. இது என்ன அநியாயம்! சாரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால் மானத்தோடு வெற்றியும் நமக்கு கிடைத்திருக்குமே... மானம் போய்விட்டதே என்று ஏங்கினேன். விளைவு இனி இந்த சூழ்நிலை நம் பகுதிக்கு வரக்கூடாது. நான் இருக்கும்வரை இந்துக்கள் தோற்றார்கள் என்ற நிலை உருவாகக் கூடாது. இந்துக்களுக்கு பாதுகாப்பு அதற்கு நாமே நம்மை தயாராக்கிக் கொள்வோம் என்று என்னையே இந்தப் பணியில் முதன்மையாக்கிக் கொண்டேன். இந்த நிகழ்வுதான் என்னை ஹிந்து சமுதாயப் பணியில் ஈடுபட வைத்தது.

நீங்கள் நினைத்ததுபோல் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிந்ததா?
முடிந்தது. நிச்சயமாக முடிந்தது. இந்துக்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள். இதுதான் அந்த பகுதியில் இந்துக்களின் கடைசி தோல்வி. எதை தின்றால் பித்தம் தெளியும் என்றவர்கள் மருந்தினை கண்டு கொண்டு விட்டார்கள். ஒரு சிறு படை, இந்துத்துவ பாதுகாப்பு படை, சின்ன சின்ன நடவடிக்கைகள். இன்று இந்துமகாசபா பெயர் கேட்டால் போதும் ஹிந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுவதை உணர்கிறேன்.

இந்த பணியை உங்கள் பகுதியோடு நிறுத்திவிட்டீர்களா?
இல்லை... இல்லவே இல்லை... இன்று குமரி முழுவதிலும் நம் இந்துத்துவ சிந்தனைக்கு ஆபத்து என்றால் குரல் கொடுக்க இந்துமகாசபா உள்ளது என்பதனை பலமுறை பல இடங்களில் நிரூபித்து மக்கள் மனதில் இந்து பாதுகாப்பு சிந்தனையை வளர்த்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நல்லவர்களை வல்லவர்களாக்கி அவர்கள் மூலம் இந்துத்துவ சிந்தனையை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றோம்.

உங்கள் வழிகாட்டி அல்லது லட்சிய மனிதராக யாரைப் போற்றுகிறீர்கள். அவரைப் பற்றி கூறுங்கள்? இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி காட்டிய சத்ரபதி வீரசிவாஜியைத்தான் எனது வழிகாட்டியாகவும் லட்சிய மனிதராகவும் நினைத்து வருகிறேன். மிகப்பொரிய பலம் கொண்ட இஸ்லாமிய படைகளை கண்டு மிரளாமல், புத்திசாலித்தனத்தால் வியூகம் அமைத்தால் வெற்றி பெற முடியும் என இந்து சமுதாயத்திற்கு நிரூபித்தவர். தான் பெற்ற வெற்றியெல்லாம் காவிக்கொடியின் கீழ் தன்னுடைய குருநாதர் சமர்த்த ராமதாசருக்கு அர்ப்பணம் செய்தவர். இந்துக்களின் மானம் காக்க அந்த நேரத்தில் இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதனோ என்று மக்கள் வியக்கும் வண்ணம் மானமிழந்து மண்டியிட்டு கிடந்த இந்து சமுதாயத்தை தலை நிமிர செய்த மகாபுருஷர்.

இந்து சமுதாயப் பணியில் நீங்கள் கடந்து வந்த பாதை?
நான் வெள்ளிமலை தவத்திரு. சுவாமி மதுரானந்த மகராஜ் அவர்களின் தலைமையில் இயங்கி வந்த இந்து சமய வகுப்பு மாணவன். ஆசிரியர், அமைப்பாளர் என சமயப்பணியை ஊர் ஊராக வெறி பிடித்தவன்போல் அலைந்து சென்று பிரச்சாரம் செய்தவன். நான் மட்டும் அந்த வேலை செய்தால் போதுமா? அதற்கான தளபதிகளை கண்டுபிடித்து சமய வகுப்பு இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்பதற்காக என் நேரத்தை அதிக அளவில் செலவளித்து, மற்றவர்களையும் நேரத்தைக் கொடுக்க வைத்து, வெற்றியும் பெற்றேன். கிறித்தவன் வாரம் ஒருநாள் ஓய்வுநாள் என்று கூறினாலும் அந்த ஓய்வு நாளை தனது மதத்திற்காக செலவழிக்கிறான். அப்படியானால் இந்துக்கள் என்ன சோரம் போனவர்களா? இல்லை. நாமும் இப்படி செய்ய முடியும். வெற்றியும் பெற முடியும் என்று பலரை இந்தப் பணியிலே ஈடுபடுத்தி கிரியா ஊக்கியாக இருந்து வெற்றி பெற்றுள்ளோம்.
கோவில் எங்கும் திருவிளக்கு வழிபாடு என்ற வேகத்தில் வேலை செய்தோம். இன்று யார் தடுத்தாலும் நிற்காத அளவு கோவில் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து இந்து சமுதாயப் பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். R.S.S. .ல் பொறுப்பெடுத்து இந்து பாதுகாப்பு பணியினை குமரி மாவட்டத்தில் வேகமாக வேலை செய்து, எது முடியாதோ அதனை முடித்து காட்டும் முகமாக வேலை செய்து இந்துக்களுக்கிருந்த சவால்களை எதிர்கொண்டு, பொதுஜன தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி, இந்து சமுதாயத்தில் இளைஞர்களை விழிப்புணர்வு அடைய வைப்பதில் இந்துக்களுக்கு வாழ்வுரிமை இயக்கம் என்ற ஒரு அமைப்பை நாங்களாகவே உருவாக்கி இந்து டயோசிசன் தேவை என்ற சிந்தனையை இந்து கிராம தலைவர்கள், படித்தவர்கள், பொரியவர்கள் மத்தியில் உருவாக்கினோம். அதன்மூலம் பல நிகழ்வுகளில் வெற்றி காண முடியும் என்பதனை நிரூபித்துள்ளோம். இந்த பாதைகளில் எல்லாம் நான் பெற்ற அனுபவம் என்னை இன்னும் வேகமாக வேலை செய்ய வைக்கிறது. என்றுமே நான் செய்த வேலையில் தோற்கவில்லை. சமுதாயம் நம்மை தோற்க விடவும் இல்லை. இன்றும் இந்து மகாசபாவும் அவ்வேலையினை இந்து சமுதாயம் ஏற்கும் சூழ்நிலையை உருவாக்க பாடுபட்டு வருகிறது. இதில் வெற்றியும் கண்டு வருகிறோம்.

இந்து இயக்கங்களில் உங்களது அனுபவம் பற்றி...?
நம்மை உத்வேகம் கொடுத்து வளர்த்தவர்கள், இந்து சமுதாயப் பணியை செய்ய கற்றுக் கொடுத்தவர்கள், அதிகமான இந்துத்துவ சிந்தனையை சொல்லிக் கொடுத்தவர்கள், இந்துக்கள் மட்டுமே தேசிய தன்மையில் உள்ளவர்கள் என்பதனை ஆழமாக பதிய வைத்த நண்பர்கள் அடங்கிய மிகப்பொரிய அமைப்புகளில் ஆத்மார்த்தமான பணி புரிந்தவன். இந்து இயக்கங்களில் இன்றும் பணிபுரிந்து வரும் தொண்டர்கள் நல்லவர்கள்தான். சுயநலமற்றவர்கள்தான், கட்டுப்பாடு மிகுந்தவர்கள்தான், தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான். ஆனால் தலைமையோ தொண்டர்களை தன் விருப்பத்திற்கு பயன்படும் நபர்களாக பார்க்கிறது. எந்த லட்சியத்தை சொல்ல இந்துத்துவ தொண்டர்களை இணைத்தார்களோ அந்த லட்சியத்திற்கு மாற்றுப் பாதைக்கு கூட தலைவர்கள் வந்து விட்டார்கள் “இந்து கடைகளிலேதான் பொருட்கள் வாங்க வேண்டும்” என்று நமக்கு பாடம் புகட்டிய இந்து தலைவர்கள், தங்கள் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்து உதவி வரும் இஸ்லாமியாரின் கல்லூரியில் முகாம் நடத்தினார்கள் என்றால் அதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “வீட்டினிலே இருக்கும்போதும், ஓட்டுப் போட செல்லும்போதும் இந்துவாக வாழ்ந்திடாது அழிவு தேடினோம்” என்று தொண்டர்களுக்கு சொல்லி தந்தவர்கள் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஓட்டுபோட தொண்டர்களையும், இந்துக்களையும் நிர்பந்தித்தார்கள் என்பதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதில்தான் நாம் வித்தியாசப்பட்டு நிற்கின்றோம். இனிப்பான சாதனைகளும், கசப்பான நிகழ்வுகளும்தான் இயக்கங்களில் நமது அனுபவம் ஆகும்.

இந்துமகாசபா ஒரு அரசியல் கட்சி ஆயிற்றே?
ஆமாம். அகில பாரத இந்து மகாசபா இந்துக்களுக்கான அரசியல் கட்சிதான். 1881-ல் துவக்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களால் துவக்கப்பட்ட முதல் அமைப்பு. இந்துக்களின் நலனுக்காக குரல் கொடுத்த முதல் அரசியல் கட்சி. மதன்மோகன் மாளவியா, பாலகங்காதர திலகர், அரவிந்தர், லாலாலஜபதிராய், வீரசாவர்கர், ஹெட்கேவார், நேதாஜி, பகத்சிங், பாலகங்காதர திலகர், வ.உ. சிதம்பரனார், பாரதியார், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு இந்துமகாசபா. அந்த அமைப்பில் இந்த கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றால் உண்மையிலே பாக்கியசாலிகள்தான். வீரசாவர்கர் வளர்த்த இந்துமகாசபா வில் டாக்டர் பொதுச்செயலாளர் தலைவராகவும் இருந்து இந்துமகாசபா வை வளர்த்தனர். 1923ல் துவக்கப்பட்ட ஹிந்து சுயம் சேவக சங்கம்தான் 1925-ல் R.S.S. . ஆனது. இந்துமகாசபா உடைய ஓர் அங்கம்தான் R.S.S. . என்று 1948 வரைக்கும் இருந்தது. அத்தனை இந்து இயக்கங்களுக்கும் ஆதாரமானது இந்துமகாசபா தான்.

ஓர் அரசியல் கட்சி என்ற நிலைப்பாட்டில் உங்கள் கருத்து என்ன?
சுதந்திர அரசில் அங்கம் வகித்த கட்சி, எதிர்கட்சியாக இருந்த ஒரு கட்சி, காந்தி படுகொலைக்குப்பின் கட்சியின் பெயரை மாற்றுங்கள் என்று அகில பாரத செயற்குழுவில் ஸ்ரீகுருஜி கோல்வால்கர் (R.S.S. .ன் இரண்டாவது தேசிய தலைவர்) சொன்னபோது, முடியாது. இந்து என்பதுதான் இந்த நாட்டின் ஆன்மா, தேசியம். அதனை மாற்ற முடியது. என்று திட்டவட்டமாக வீரசாவர்கர் கூறினார். அதன் விளைவுதான் பாரதீய ஜனசங்கம். உடனிருந்தவர்களே நம்மை எதிர்கிறார்களே என்றாலும் அத்தனையும் மீறி இன்றும் இந்துக்களுக்காக பாடுபட்டு வரும் ஒரே அரசியல் கட்சியாக இருப்பது அகிலபாரத இந்து மகாசபாதான். இந்துக்களுக்காக பாடுபடுவதாக நாம் நம்பி வந்த பாரதீய ஜனதா கட்சியோ எல்லோருக்கும் ஒரே பொது சிவில் சட்டம் என்று பேசியும், ஒரே நாடு, ஒரே மக்கள் என்று பேசவும் செய்துவிட்டு தனது கட்சி அமைப்பிலே சிறுபான்மை பிரிவு என்ற ஒன்றிறை ஏற்படுத்தி, தான் சொல்லி வந்த கருத்தினை சிதைத்து விட்டது. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றால் பெரும்பான்மை எது? சிறுபான்மை எது? எல்லாம் ஒன்றுதானே.
இந்துமகா சபாவில் உறுப்பினர் ஆக வேண்டுமானால் இந்த நாட்டை தாய் நாடாகவும், தந்தை நாடாகவும், புனித நாடாகவும், இந்நாட்டின் கலாச்சாரத்தை யார் யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் உறுப்பினராக முடியும் என்று வீரசாவர்கர் தெளிவாக கூறியுள்ளார். இந்துத்துவ சிந்தனையை தூக்கிப்பிடித்து காவிக்கொடியினை கையிலேந்தி இந்துக்களின் பாதுகாப்புதான் தேசிய பாதுகாப்பு என்ற நிலையிலே இந்துக்களுக்காக வேலை செய்கின்ற அரசியில் கட்சியாக இன்று வலம் வரும் ஒரே கட்சி இந்து மகாசபாதான்.

இந்து சமுதாயப் பணிக்கும், அரசியல் பணிக்கும் இடையே என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?
இந்துக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து ஒருங்கிணைப்பது சமுதாயப் பணியாகும். ஒருங்கிணைக்கப்பட்ட இந்துக்களுக்கு பாதுகாப்பு என்பதோ, பாதுகாப்பு கொடுக்க நினைக்கும் இந்து தலைவர்களுக்கே அரசாங்க அங்கீகாரம் என்னும் போது அரசியல் தேவைப்படுகிறது. இந்திய அரசியலில் 90% போர் இந்துக்கள் தான். சட்டமன்றம் ஆனாலும், பாராளுமன்றம் ஆனாலும் இந்துக்களின் அழுகுரலுக்கு மதிப்பில்லையே ஏன்? அங்கே 90% போர் இந்துக்கள் பல்வேறு கட்சிகளின் பிடியில், பல்வேறு கொள்கைகளின் பிடியில் உள்ளார்கள்.
ஸ்ரீரங்கம் கோவிலின் முன்பு பொரியார் சிலை. அதில் கடவுள் மறுப்பு கொள்கைகள். வேறு இடங்களா இல்லை. இந்து கோவில் முன்பு தேவையா? என்று கேட்க நமக்கு சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் இந்துக்களின் பாதுகாவலர்கள் இல்லையே! மத்திய நிதி அமைச்சரின் ஏற்பாட்டில் சிறு பான்மை கிறித்தவ, இஸ்லாமியார்களுக்கு கல்வி சாலைகளில் வருடம் 1000 ரூபாய் மானியம் என 3 முதல் ஆறாம் வகுப்பு வரை ஓர வஞ்சனையாக கொண்டு வரப்பட்ட சட்டம், இந்துக்களாகிய நாம் நாட்டில் வாழ வேண்டுமா என்று வினா எழுப்பியுள்ளதே! இதனை தடுக்கும் சக்தியோ, கேட்கும் சக்தியோ அரசியலுக்குத்தான் உள்ளது.
இந்துக்களின் உரிமை, பாதுகாப்பு என்ற விஷயத்தில் இயக்கங்களோடு இணைந்த அரசியல் பணி தேவைப்படுகிறது. இஸ்லாமியரோ, கிறித்தவரோ எல்லா அரசியல்கட்சியிலும் கலந்து தங்கள் சமுதாய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆனால் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கும் இந்துக்கள் சிறுபான்மையை அண்டி பிழைக்க வேண்டியுள்ளது. அக்கட்சிகளோ இந்துக்களை அவமானபபடுத்துவதிலே முன்னணி வகிக்கின்றன. இவர்களிடமிருந்தெல்லாம் இந்துக்களை பாதுகாக்க வலுவான இந்துத்துவ அரசியல் பணி தேவைப்படுகிறது.

பத்திரிக்கைத் துறையில் உங்கள் சாதனை என்ன? என்ன சாதனைகளை செய்திட விரும்புகிறீர்கள்?
பத்திரிக்கைத் துறையில் எனக்கு அனுபவம் கிடையாது. பத்திரிக்கையை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும்பணிதான் என் வேலையாக இருந்தது. விதி என்னை ஆசிரியனாக்கியது. புனித பாரதம் மாத இதழ் வெற்றிபெற உழைக்க வந்தவன்தான் நான். நானே அதனை சுமக்கும் பொறுப்பிற்கு தள்ளப்பட்டேன். இதுவும் இறைவன் பணி தானே. மக்களிடம் நம் செய்தியை கொண்டு செல்லும் வழிதானே என்று ஆசிரியர், வெளியீட்டாளார் என்ற பொறுப்பிலிருந்து பணியாற்றுகிறேன்.
சாதனை என்று புரிந்ததாக எனக்கு தொரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான நல்ல வாசகர்களையும். அதன்மூலம் இந்துமகாசபா செய்தியினையும் சொல்லும் வாய்ப்பினையும் பெற்று தந்துள்ளது புனித பாரதம் மாத இதழ். இந்துக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஓர் இந்துத்துவ புரட்சியை உருவாக்க “புனித பாரதம்” வாயிலாக ஒரு புனிதப் போர் நிகழ்த்தி வருகின்றேன். எல்லா இந்து வீடுகளிலும் இந்துத்துவ சிந்தனை பரவ முயற்சி எடுத்து வருகிறேன். இது தனிநபர் போராட்டம்தான், இப்போது உங்களைப் போன்றவர்கள் என்னை சந்திக்க வைத்தது புனித பாரதம் மாத இதழ் தானே.

இந்தப்பணி மிகவும் கடினமானதாய் இருக்கிறதே எப்படி எதிர்கொள்கிறீர்கள்.?
சங்க பிராத்தனையில் “த்வதீயாய கார்யாய பத்தா கடீயம், சுபாமாசிஷக் தேஹி தத்பூர்த்தயே” என்று சொல்லுவோம். எங்கும் நிறைந்த இறைவனே இது உன்னுடைய கார்யம், அதனை செய்ய நாங்கள் கச்சை அணிந்துள்ளோம். அது நிறைவேற எங்களுக்கு சுபமான ஆசிகளை தந்தருள்வாயாக என்று கூறியவர்களல்லவா நாம். சவால்களை எல்லாம் எதிர்ப்புகளை எல்லாம் எதிர்த்து நின்று வெற்றி பெறுவதுதானே வீரர்களுக்கு அழகு. ஆகையால் எதிர்ப்புகளை மனமகிழ்வுடன் எதிர் கொள்கிறோம்.

யார் யாரால் உங்களுக்கு எதிர்ப்பு?
மத மாற்றத்தை நாம் எதிர்ப்பதால், திடீர் சர்ச்சுகளை நாம் எதிர்ப்பதால் கிறித்தவர்களிடம் எதிர்ப்பு. இஸ்லாமிய பயங்கராவாத செயல்களை நாம் எதிர்ப்பதால் இஸ்லாமியர்களிடம் எதிர்ப்பு. இந்துக்களை அவமானப்படுத்தும் செயல்களை எதிர்ப்பதால் அரசியல்வாதிகளிடம் எதிர்ப்பு, கிறித்தவ, இஸ்லாமிய, அரசு அதிகாரிகளிடம் எதிர்ப்பு என நாலா பக்கமும் எதிர்ப்பு என்னும் அலைதான் வீசுகிறது. இத்தகையவர்களை எதிர்த்து நின்று போராடுவதால் ஆதரவு என்னும் இந்துக்களின் அலை நம்மை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடற்கரை சர்ச்சுகள், மத மோதல்கள் பற்றி...?
கடற்கரை R.C சர்ச்சுகளின் தொந்தரவு சற்று குறைவுதான். C.S.I. பெந்தயகோஸ்த் போன்றவைகளால் தான் இப்போது அதிகமான பிரச்சினை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான அதிகாரிகள் வெறி பிடித்த கிறித்தவர்கள். இந்துக்களுக்கு நெருக்கடி கொடுத்தாவது கன்னியாகுமரியை கன்னிமேரியாக்க வேண்டும் என்று வெறித் தனமாக வேலை செய்கிறார்கள். குமரி மாவட்ட இந்துக்கள் கடும் இடர்பாட்டில் அவதியுறுகின்றனர். ஆங்காங்கே சிறு சிறு மத மோதல்களும், உரசல்களும் வழக்குகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

வழக்குகள், சிறை அனுபவங்கள் இவைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்.?
இவர்கள் எல்லாம் இரும்பெனவாக்கும் இன்முகத்துடனே ஏற்றிடுவோம். நொந்தே போயினும் வெந்தே மாயினும் வந்தே மாதரம் என்றிடுவோம் என்று பாடுபவர்கள் நாம். நம் தலைவர்கள் பட்ட வேதனைகள் நாம் இனி படுவதில்லை. பாரதத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சி.யும், வீரசாவர்க்கரும்தான். 27 ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் வீரசாவர்க்கர். தனிமை சிறைவாசம், செக்கிழுப்பு, கல்லுடைப்பு, தடியடி போன்றவற்றில் தோய்ந்து வந்த பாரம்பாரியம் நாம். அதனால் அச்சப்பட தேவையற்ற தன்மை உள்ளது. இந்து வழக்கறிஞர்களின் உதவிகள் நமக்கு கிடைத்து வருகின்றன. பொரியோர்களின் ஆதரவும் தன வந்தர்களின் உதவிகளும் நமக்கு கிடைத்து வருகின்றன. வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது அலைச்சல்தான் அதிகம். சிறைச்சாலைகளிலே பகவத்கீதை சொல்லிக் கொடுப்பது, தியானம், யோகா, சத்சங்கம், பஜன் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி நல்லோர் வட்டம் உருவாக்கி இந்துத்துவ சூழ்நிலைகளை உருவாக்குவது போன்ற நிகழ்வுகளை நாம் நடத்துவதால் வேறு செய்திகளைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. சிறைச்சாலை நமக்கு கட்டாய ஓய்விற்காக இறைவன் கொடுத்தாலும் அது தவச்சாலையாக மாற்றும் சக்தியை அவனே நமக்கு தருகிறான். எந்த சூழலும் இந்துத்துவ பயிர்வளர உகந்தவையே என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சிதான்.

உங்கள் குடும்பம், நண்பர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?
வீட்டில் நான் மட்டும்தான். தாய் தந்தையர் தற்போது உயிரோடு இல்லை. எனக்கு குடும்பம் என்பது இந்துத்துவ பணியில் என்னுடன் தொடர்ந்து ஈடுபட்டு வரும் என் அருமை தம்பிகள்தான். இவர்கள்தான் எனக்கு தளபதிகள். இவர்கள் தான் என் நண்பர்கள். இவர்கள்தான் உறவினர்கள். எல்லாமும் இவர்கள்தான்.

ஹிந்து சமுதாயம் விழிப்புணர்வுபெற எவையெல்லாம் நடைபெற வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
நல்ல வழிகாட்டுதல், சுயநலமற்று உழைக்கும் நேர்மையான தலைமை, நல்ல சிந்தனையாளர்களால் உருவாக்கப்படும் நல்ல தளபதிகள். இவர்களால் இந்து மறுமலர்ச்சி, இந்துக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆன்மீக நிகழ்ச்சியோடு கூட நமது மதத்திற்கு ஏற்பட்டு வரும் ஆபத்தை உணரும் விதம் ஏற்பாடுகள், பகவத்கீதை வகுப்புகள், இந்துமத உணர்வோடு கூடிய ஆன்மீக சத்சங்கங்கள், தேசிய உணர்வினை ஏற்படுத்தும் விதம் நிகழ்ச்சிகள் இதன்மூலம் இந்துத்துவமே தேசியம் என்ற சிந்தனையை ஏற்பட செய்வது. இந்துக்களிடையே நம்பிக்கையை ஏற்பட வைக்கும் வகையில் நிகழ்ச்சிகள், இந்து பாதுகாப்பு மையங்கள் நல்ல பயிற்சிகள் இவை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போழுது தீவிர லட்சிய பக்தியுடன், சுயநலமற்று வீரத்தோடும், விவேகத்தோடும் பணிபுரியும் செயல்வீரர்களின் பின்னால் இந்துக்கள் அணி திரள தயாராவார்கள். கடந்த காலத்தில் கசப்பான அனுபங்களிலிருந்து சிறந்த பாடங்களை நாம் பெற்று அதனடிப்படையில் வேலை முறை அமைத்துக் கொண்டால் உங்களை பார்த்தே உங்களின் தன்னம்பிக்கையை பார்த்தே ஹிந்து சமுதாயம் மறுமலர்ச்சி அடையும்.

முஸ்லீம், கிறிஸ்தவ பிரிவினைவாதிகளை அடையாளம் காட்டிய அளவிற்கு நக்கலைட்டுகளை அடையாளம் காட்ட தவறியது ஏன்?
கிறிஸ்தவமும், இஸ்லாமும் நேரடியாக கண்ணுக்கு தெரியக்கூடிய எதிரிகளாக இன்று தெருவுக்கு வந்துவிட்டனர். நக்சலைட்டுகள் பரவலாக வெளிப்படவில்லை. ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆபத்துகளை விட மிகப்பெரிய ஆபத்து இவர்களால் தான் உருவாகும். தமிழகத்தில் இவர்களுடைய செயல் துவங்கி விட்டது. பாதிப்புதன்மை மத ரிதியாக குறைவு. இவர்கள் ஏதாவது ஒரு ஆளும் வர்த்தகத்தோடு தொடர்பு வைத்து கொண்டிருப்பதால் இவர்களுடைய முகம் வெளிச்சத்திற்கு வரவில்லை.

நமது பாரத்தின் முதல் எதிரிநாடு பாகிஸ்தானா, சீனாவா? ஏன்?
முதல் எதிரி இரண்டாம் எதிரி என்பதல்ல. இரண்டுமே எதிரி நாடுகள் தான். மிகப்பெரிய எதிரி என்று சொல்லுகிற போது சீனா தான் பெரிய எதிரி. இன்னும் சீனாவை எதிர்க்க வேண்டும் என்ற சிந்தனை, எதிர்க்க முடியும் என்ற சிந்தனை நமக்கு வரவில்லை. பாகிஸ்தானை நம்மால் சரிபண்ண முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சீனாவை பார்க்கவே நமக்கு எண்ணம் வரவில்லை. இமயமலை எவரஸ்ட் சிகரம் அதன் அடிப்பகுதி அத்தனையும் சுரங்கம் அமைத்து ஆக்ரமித்து உள்ளது. இன்று அருணாச்சலபிரதேசம் மீது உரிமை கொண்டாடுர்கிறது. 1962ல் 48,000 சதுர கிலோ மீட்டார் பரப்பளவை சீனாவிடம் நாம் இழந்துள்ளோம். இன்னும் சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது. பாகிஸ்தான் உள்நாட்டு கலவரத்தில் சிக்கும்பொழுது சீனா ஆக்ரமித்து கொண்டே இருப்பதனால் நமது முதல் பயங்கரமான எதிரி சீனாதான்.

வடபாரதத்தில் வளர்ந்துள்ள ஹிந்து உணர்வு தென் பாரதத்தில் குறிப்பாக தமிழகத்து மக்களிடம் உள்ளதா?
இல்லை. தமிழகம் தொய்வீக தமிழகம் தான். ஆன்மீகம் இங்கு அதிகம் தான். அதேபோல் ஆன்மீக எதிர்ப்பு பிரச்சாரமும் இங்கே அதிகம். நாஸ்திகர்களுடைய, பொய் பிரச்சாரத்தினால் ஆட்சி கூட அவார்களுடையது தான் இங்கிருக்கும் திராவிட கட்சிகளால் கிறிஸ்தவ,முஸ்லீம் எதிர்ப்புகளை விட இந்து இயக்கங்களுக்குதான் அதிகமான எதிர்ப்பு. இதன் விளைவு, தமிழகத்திலே நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதில் ஹிந்து சமுதாயத்தில் தயக்கம் உள்ளது. இங்கே கடவுள் எதிர்ப்பு கொள்கை இருப்பவர்கள் ஆட்சி செய்வதால் மக்கள் தங்கள் சமுதாய உணர்வை வெளிக்காட்ட தயங்குகின்றனர். இந்தியாவில் வடக்கு பகுதியில் பந்தக் கட்சியினராக இருந்தாலும் எல்லோருமே ராமன் மீதும், ஹிந்து கடவுள்கள் மீதும் நம்பிக்கை உடையவர்கள். மேலும் அதை பகிரங்கமாக வெளிக்காட்டியும் வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. எனவே தமிழகத்தில் இந்து இயக்கங்கள் வடபாரத்ததைப் போல் சென்றடையவில்லை.

மக்களை மோசடி மதமாற்றம் செய்வதில் விஞ்சி இருப்பது அரபு விசுவாசிகளா? ரோம விசுவாசிகளா?
தமிழகத்தை பொறுத்தவரை ரோமின் ஆதிக்கம் தான் அதிகம் இதிலும் கூட வயிற்று பிழைப்புக்காக சிறு சிறு கிறிஸ்தவ கம்பெனிகள் சின்ன சின்ன அமைப்புகளை தோற்றுவித்து அதன் மூலம் மத மாற்று வேலையில் ஈடுபட்டிருப்பது அதிகம்.

நாஸ்திக இயக்கம் நடத்துபவார்கள் குறிர்ப்பாக ஏன் நமது இந்து மதத்தை மட்டும் தாக்குகிறார்களே?
நாஸ்திகம் என்பதே ஆஸ்திகத்தை எதிர்ப்பது தானே. ஆகையால் அவார்களின் வேலையே இந்துக்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதுதான்.

கலாச்சார, பண்பாட்டு, சீரழிவுகளிலிருந்து நமது தர்மத்தை காக்க இந்து மகா சபா ஆற்றும் பணி?
ஹிந்துக்களை ஹிந்துகள் என்று உணர வைப்பது முதல் வேலை, அதற்கான விழிப்புணார்வு பிரச்சாரங்களை இந்துமகாசபா செய்து வருகிறது. கலாச்சார பண்பாடு அழிந்து போவதால் நமது தர்மத்திற்கும் நமது நாட்டிற்கும் எத்தகைய ஆபத்து வரும் என்ற விழிப்புணார்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந்துமகாசபா வின் அடுத்த வேலை. இதற்காக பண்பாட்டு வகுப்புகள், சத்சங்கங்கள், திருவிளக்கு வழிபாடுகள், ஆலயதிருவிழாக்கள் இவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

இளைய தலைமுறையினருக்கு என்ன சொல்வீர்கள், என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
உங்கள் முகத்தில் சுவாமி விவேகானந்தரைப் பார்க்கிறேன். உங்களின் செயலில் நேதாஜியை பார்க்கிறேன். உங்கள் சிந்தனையில் வீர சிவாஜியை பாக்கிறேன். உங்கள் தியாக மயமான சுயநலமற்ற உழைப்பில் வீர சாவர்க்கரை பார்க்கிறேன். உங்களைத்தான் பார்க்கிறேன். தன்னம்பிக்கை உள்ள இளைஞராக இருக்கும், எதையும் சாதிக்கும் மனம் படைத்த இளைஞராக இருக்கும், சுறுசுறுப்பாக வேலை செய்யும் இளைஞராக இருக்கும், எதிரியை துவம்சம் செய்யும் வீறு கொண்ட தோள் வலிமை கொண்ட இளைஞராக இருக்கும் உங்களைத்தான் பார்க்கிறேன். உங்களால்தான் எல்லாம் முடியும். உங்களால் முடியவில்லை என்றால் யாரால்தான் முடியும்? ஆமாம் முடியும் இளைஞரே! உங்களால்தான் இந்த இந்துஸ்தானை பாதுகாக்க முடியும், இந்துக்களின் பாதுகாப்பு என்பது உங்கள் கையில்தான் உள்ளது. பாரதமாதா உங்களைத்தான் எதிர்பார்க்கிறாள். நல்ல விடியலுக்காக இந்துக்கள் காத்திருக்கிறார்கள். சுய மறதியிலிருக்கும் இந்துக்களை தட்டி எழுப்பி ஆம்! நாம் இந்துக்கள், இந்த நாட்டின் சொந்தக்காரார்கள், யார் நம்மை அடிமை படுத்தி வைத்துள்ளார்கள் என்று சிலிர்த்தொழச் செய்யும் சக்தி சிங்கமயமான இளைஞார்களே! உங்கள் வசமே உள்ளது. இந்து இளைஞார்களே! இது பொன்மயமான நேரம். இது போன்ற காலம் நாளை வருவதில்லை. தயாராகுங்கள் ஹிந்துஸ்தானில் இந்துக்களை பாதுகாக்க தன்னை தயார்படுத்திக் கொள்ளுங்கள். வலிமையை உடலை பேணுங்கள். வலிமையான சிந்தனையை பெற்றுக்கொள்ளுங்கள் தேசம் உங்களை அழைக்கிறது. நல்லவர்களை பாதுகாக்க வல்லவர்களான உங்களால் மட்டும் முடியும் சிந்தை தொளிவாக்கு அல்லாலிதை செத்த உடலாக்கு என பாரதி சொல்வதைப் போல நல்ல சிந்தனையோடு தன்னம்பிக்கையோடு நம் தாய் நாட்டை காக்க தயாராக ஆவதுதான் இன்றைய இளைஞார்களின் கடமை. இதைத்தான் இளைஞார்களிடம் எதிர்பார்க்கிறேன்.