ABHMS

Hindu Mahasabha


 

  அகில பாரத இந்து மகா சபா முதன் முதலில் சென்னையில் 1881 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது அப்போதைய அதன் பெயர் "இந்து சபா". எல்லா மாகாணங்களிலும் "இந்து சபா" துவங்கப்பட்டு இந்துத்துவ பணிகள் வேகமாக செயல்பட்டுவந்தது.

அணைத்து மாகாணங்களில் செயல்பட்டுவந்த "இந்து சபா" - வை ஒருங்கிணைத்து "அகில பாரத இந்து மகா சபா" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஹரித்துவாரை தலைமை இடமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தது.

1917 ஆம் மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதி அகில பாரத இந்து மகா சபா "சமூகத்தின் பதிவு அகிட்டு" தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழகத்திலே இந்து மகா சபாவின் பணிகளை துவக்கி வைத்தார். வீர சாவர்க்கரின் மதுரை மாநாட்டிற்கு தலைமை ஏற்க தயங்கி யாரும் முன்வராத போது இந்த மாநாட்டிற்கு தலைமை ஏற்று நடத்தியவர் தேவர் மேலும் 29 சேலத்தில் நடந்த மாநாட்டில் வீர சாவர்க்கர் தலைமை தாங்கி பேசினார். [Society of Registration Act] பதிவுசெய்யப்பட்டது.

அகில பாரத இந்து மகா சபாவின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, மொரிஷியஸ், உகாண்டா தென்னாப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் வேகமாக வளர்ந்தது. லாலா லஜபதி ராய், லாலா ஹன்ஸ் ராஜ் மதன் மோகன் மாளவியா டாக்டர் பி.எஸ் மூஞ்சே, சுவாமி சிவானந்தர், ஸ்ரீ ராமானந்த சட்டர்ஜி, பாபு ராஜேந்திர பிரசாத், சாய் பரமானந்த வீரசாவர்க்கர், ஸ்ரீ எம்.ஆர்.நெட் கர், ஸ்ரீ .டிஆர் புக்கான், ஸ்ரீ .N.C.கேல்கர் போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் தேசிய தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்பட்டது.

வீர சாவர்க்கருடன் இணைந்து முகர்ஜி, கேசவ பலிராம் ஹெட்கேவார் செயல்பட்டனர். கேசவ பலிராம ஹெட்கேவார் அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துணைத் தலைவராக செயல்பட்டார். வீர சாவர்க்கர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைமை ஏற்க அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாது மதன்லால் திங்கரா பகத்சிங், ராஜகுரு , சுகதேவ், வாஞ்சிநாதன், , வ.ஊ.சி. சுப்பிரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி, சந்திரசேகர ஆசாத், வ.வே.த ஐயர், மேடம் காமா போன்ற எண்ணற்ற புரட்சியாளர்களை உருவாக்கி பாரத அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் அரும்பாடுபட்டார். வீர சாவர்க்கர் எழுதிய எரிமலை 1857 – First War Of Independence என்ற புத்தகம் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது.

வீர சாவர்க்கர் ஆங்கில அரசால் சில வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார் .சிறையில் செக்கிழுத்து வீரசாவர்க்கர் 27 ஆண்டுகள் மொத்தமாக அந்தமான் செல்லுலார் சிறையில் மிகுந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட. மாவீரன் வீர சாவர்க்கர் சிறையில் இருந்த காலம் உட்பட 6 முறைக்கு மேலாக அகில பாரத இந்து மகா சபாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சென்னை மாகாணத்தை சேர்ந்த டாக்டர் வரதராஜுலு நாயுடு என்பவர் வீர சாவர்க்கரின் முயற்சியால் அகில பாரத இந்து மகா சபாவின் தன்னை இணைத்துக் கொண்டார் .அகில பாரத இந்து மகா சபாவின் தமிழக தலைவராக வ உ சிதம்பரனார் பொறுப்பு வகித்தார். வீரசாவர்க்கர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுவித்து இந்துமகா சபாவின் செயற்குழு கூட்டி7.8.1948 அன்று மீண்டும் அரசியல் நடவடிக்கையை தொடர முடிவெடுக்கப்பட்டது.

இந்துமகா சபாவின் கொள்கைகள் “தர்ம ரக்ஷா
ராஷ்ட்ர ரக்ஷா
கோ ரக்ஷா “
அயோத்தியில் எம்பெருமான் ஸ்ரீ ராமருக்கு ஆலயம் அமைக்க 1948 இல் இருந்து வழக்கு தொடுத்து போராடிய ஒரே அமைப்பு அகில பாரத இந்து மகா சபா. 12.8.1951 ம் ஆண்டு வீர சாவர்க்கரின் நுண்ணறிவால் இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பாரதத்தை தாய் நாடாகவும், தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும், இந்த நாட்டின் கலாச்சாரத்தை சிறந்ததாக ஏற்றுக்கொள்கின்றனர் யாராகினும் இந்து மகா சபாவின் உறுப்பினராகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் 2003 ம் ஆண்டு அகில பாரத இந்து மகா சபா தூசி தட்டி மீண்டும் களம் காண பெரும் முயற்சி எடுத்தவர் அவருடைய வாழ்நாளில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இன்று சமுதாய பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வீரமிகு துரவி டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்கள். பாரத அன்னையின் பாதமாக இருக்கும் குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள இந்துத்துவ இளைஞர்களை ஓரணியில் திரட்டி மாநில தலைவர் பொறுப்பில் இருந்து வழி நடத்தி வருகிறார்கள் வருகிறார்கள் அது மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களிலும் இந்து மகாசபை தேசிய துணை தலைவராகவும் இருந்து வழி நடத்தி வருகிறார்கள், அவர் வழி நடந்து அவரின் கரங்களை வலுப்படுத்த உணர்வுள்ள இந்துக்களே அகில பாரத இந்து மகா சபா வில் இணைவீர்.